​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"ராகுல்காந்தி நடைபயணத்தின் வரவேற்பு கர்நாடக தேர்தல் முடிவில் எதிரொலித்தது" - அசோக் கெலாட்

Published : May 13, 2023 4:27 PM

"ராகுல்காந்தி நடைபயணத்தின் வரவேற்பு கர்நாடக தேர்தல் முடிவில் எதிரொலித்தது" - அசோக் கெலாட்

May 13, 2023 4:27 PM

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கு கிடைத்த வரவேற்பு, கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

இது குறித்து டுவிட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ள அசோக் கெலாட், கர்நாடக மக்கள் வகுப்புவாத அரசியலை புறக்கணித்து, வளர்ச்சி அரசியலை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் இது மீண்டும் நிகழும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.